நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜாகிர் உசேன் பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.