திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் நேற்று மரணமடைந்தார். தொடர்ந்து அவரின் பூத உடலுக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 17) இரவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் நாறும்பூநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.