தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் - ஹப்சிகுடா சிக்னலில் இன்று (மார்ச் 24) காலை கொடூரமான சாலை விபத்து ஏற்பட்டது. பிரேக் கோளாறு காரணமாக சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பைக்குகள் மீது சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உள்பட பைக்குகளில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரியை அப்புறப்படுத்தினர்.