ஒரத்தநாடு - Orathanadu

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து பெண் விஏஓ உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து பெண் விஏஓ உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ஈச்சங்குடியை சேர்ந்தவர் ரம்யா(37). இவரது கணவர் சதீஷ்குமார். ரம்யா ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்தும் வந்தார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பியபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கியுள்ளார். அப்போது ஏதோ கடித்துள்ளதாக தனது கணவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அங்கு பார்த்த போது கட்டுவிரியன் பாம்பு ஓடியுள்ளது. இதையடுத்த உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ரம்யாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.17) காலை ரம்யா இறந்தார். இதுகுறித்து கள்ளபெரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా