வெந்தயக் கீரையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, ஏலக்காய் வதக்க வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் கடாய் வைத்து சீரகம் தாளித்து வெந்தயக்கீரை, வேகவைக்கப்பட்ட பட்டாணி, அரைத்த மசாலா கலவை, பாலையும் சேர்த்து உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான வெந்தயக்கீரை பட்டாணி கூட்டு ரெடி.