பூதலூரியில் சாலை மறியல் மக்கள் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டி காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நடந்து வருகின்றது. அந்த சுற்று சுவரை கட்ட விடாமல் அந்த இடம் தனியாரிடம் உள்ளதாக தெரிவித்து பணியை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று செங்கிப்பட்டி - திருக்காட்டுப்பள்ளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் தாசில்தார் மரிய ஜோசப் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.