தஞ்சை குருங்குளம் அரசு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் நுழைவு வாயிலில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் கம்பீரமான சிலை மேல் காட்டு கருவேல மர முட்களை வெட்டிப்போட்டு முழுவுருவ சிலையிலும், இருபுறமும் உள்ள படியிலும் யாரோ மர்ம நபர்கள் அண்ணாவை களங்கப்படுத்தும் வகையில் அவமதித்துள்ள வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட இணைய தளங்களில் பரவி வருகிறது
உடனடியாக அரசு, சர்க்கரை ஆலை நிர்வாகம் கருவேல முட்களை அகற்றி அண்ணாவின் சிலையை தூய்மைப்படுத்தி
மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க இரும்பு கம்பிகளால் கூண்டு அமைத்திட வேண்டும் என்று குருங்குளம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.