தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் நெடார் வெட்றாற்றங்கரையிலிருந்து பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து மேல தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் காவடி முளைப்பாரி எடுத்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்