தீபாவளிக்கு பட்டாசு கடை அமைக்க தற்காலிக உரிமம் அவசியம்

85பார்த்தது
தீபாவளிக்கு பட்டாசு கடை அமைக்க தற்காலிக உரிமம் அவசியம்
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008ன் படி, தற்காலிக உரிமம் பெற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008ன் படி, தற்காலிக உரிமம் பெற வேண்டும்.

மேலும், உரிமம் பெற விரும்புவோர், கடை அமைந்துள்ள கட்டடத்திற்கான வரைபடம், கடை அமைந்துள்ள
இடத்தின் சட்டபூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரிக்கான சான்று. அரசுக்கணக்கில் ரூ. 500 செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றிற்கான நகல்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, இணையவழியில் < https: //tnedistrict. tn. gov. in/>) 30ம் தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும். மேலும், அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி