கழிவுநீர் கால்வாயில் விழுந்த இளைஞர் பலி (வீடியோ)

84பார்த்தது
டெல்லி பஜன்புரா பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பைஸ்லா என்ற இளைஞர், கடந்த 14ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அடுத்த நாள் (செப்.15) காலை 6 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கோகுல்பூர் கழிவுநீர் கால்வாய் சுவரில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது, நிலைதடுமாறிய அவர் திடீரென கால்வாய்க்குள் விழுந்தார். நீரில் மூழ்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்க முயன்றனர். இருந்தபோதிலும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி