ஒரத்தநாடு : ஜமாபந்தியில் பங்கேற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கோட்டாட்சியர்

162பார்த்தது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் சரகத்திற்கு நடைபெற்ற 1430 பசலி ஜமாபந்தி தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்குப் புதிய குடும்ப அட்டை மற்றும் 35 மேற்பட்ட முதியவர், மாற்றுத் திறனாளி, விதவைகள் ஆகியோருக்கு சமூகநலத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்கள் ஆக எழுதிக் கோட்டாட்சியர் வேலுமணி இடம் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் அனைத்துக்கும் உடனடியாகத் தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி