கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் முக்கட்டில் செப்.17ம் தேதி மாலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சலில் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஒரு நபர் செல்போனை பழுது பார்ப்பதற்காக அவரிடம் கொண்டு வந்தார். கடையின் ஊழியர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது, செல்போன் திடீரென வெடித்து, மளமளவென தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.