விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் சுதந்திர தின விழா

59பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில்  78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி சங்க வளாகத்தில்
நடைபெற்றது.
சங்கச் செயலாளர்
தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைவர் தேவராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கண்ணன் சுதந்திரத்திற்கு போராடியவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தையல் பயிற்சி பள்ளி மற்றும் விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமிகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு கோலப்போட்டி மற்றும் பலூன் ஊதும் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் போட்டி தேர்வு பயிற்றுநர் லட்சுமிபிரியா, தையல் பயிற்சி பயிற்றுநர் பாத்திமா, களப்பணியாளர்கள் லீமாரோஸ், மணி, லட்சுமி, புனிதவள்ளி, செல்வி, ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி