தஞ்சாவூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

84பார்த்தது
தஞ்சையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா, காளி வீதி உலா பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த கரந்தையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது, இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும், அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 8ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது இதையடுத்து தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது, இந்நிலையில் காளி படுகளம் நேற்று நடைபெற்று இரவு முதல் இன்று பகல் வரை காளி வீதி உலா நடைபெற்றது, வீடுகள் தோறும் பூஜைகள் செய்யப்பட்டு காளியாட்டம் நடைபெற்றது, இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி