தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், போக்சோ சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சந்தோஷ்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மா. விஜயா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரா. தங்கராஜ் வாழ்த்திப் பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் சிந்தியா வேதா, பாரா லீகல் தன்னார்வலர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெண் குழந்தைகளின் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு, இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங்களை மாணவ- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழிப்புணர்வு ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
இவ்விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், மகளிர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெனிட்டா, விசாகா கமிட்டி உறுப்பினர் உஷா மற்றும் பிற துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட (அலகு 2) திட்ட அலுவலர் பூங்குயில் தொகுத்து வழங்கினார். நிறைவாக சமூக நலப்பணித்துறை உதவிப்பேராசிரியர் மனிஷா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.