மேட்டூர் - Mettur

மேட்டூர்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

மேட்டூர்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சதாசிவம் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். இதில் மேட்டூர் துணை தாசில்தார் தமிழ்செல்வி, மின்சார வாரிய செயற்பொறியாளர் ரவி, மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுமித்ரா பாய் மற்றும் வனத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சதாசிவம் எம். எல். ஏ. பேசுகையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித்துறையும் மின்சாரத்துறையும் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மழை காலங்களில் ரோந்து பணியை ஈடுபடுத்த வேண்டும். மழை நீர் தேங்காதவாறு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా