மேட்டூர் அணை நீர்மட்டம் 101. 08 அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று(செப்.24) 2வது நாளாக நீர் வரத்து விநாடிக்கு 3, 000 கன அடியாக நீடிக்கிறது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1, 386 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1, 282 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 20ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 102. 37 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று(செப்.25) 101. 08 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 66. 24 டிஎம்சியாக உள்ளது.