சென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (செப்.25) கனமழை பெய்து வருகிறது. காலை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.