ஆசியாவில் உள்ள சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் முறையாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட் 2024-ன் ஆசியா பவர் இன்டெக்ஸ் அறிக்கை, ஆசிய கண்டத்தில் இந்தியாவின் சக்தி வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. மேலும், இந்தியா இன்னும் ஒரு பெரிய சக்தியாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என லோவி இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.