செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் அவரின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை (செப்.25) காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் தீர்ப்பு வழங்க உள்ளனர்.