சேலம் கருப்பூர் அருகே உள்ள ஆனைகவுண்டம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு மற்றும் ஊக்குவிப்புத்துறை சார்பில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மினி டைடல் பூங்கா திறப்பால் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில். மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, எம்.எல்.ஏ. க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணைமேயர் சாரதா தேவி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.