சேலம் கொளத்தூரில் பெண் கொலை 3-வது கணவர் கைது

71பார்த்தது
சேலம் கொளத்தூரில் பெண் கொலை 3-வது கணவர் கைது
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாலவாடியை சேர்ந்தவர் அருணாசலம். இவருைடய மனைவி கவிதா. சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அருணாசலம், அரிவாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருணாசலத்தை கைது செய்தனர். அருணாசலத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, கவிதா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர் என்றும், 3-வதாக தன்னை திருமணம் செய்து கொண்டதாக அருணாசலம் போலீசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கும், கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அவர் என்னை பிரிந்து மாமியார் வீட்டுக்கு சென்றார். மீண்டும் சேர்ந்து வாழுவோம் என்று கூறிய போது அவர் மறுப்பு தெரிவித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கவிதாவை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் அருணாசலத்தை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி