சேலம்: 104. 76 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று(அக்.26) காலை முதல் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நேற்று முன்தினம்(அக்.25) வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 102. 92 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று(அக்.27) 104. 76 அடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.