பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக அக். 9-இல் காலமானார். உழைப்பால் உச்சம் தொட்ட அவரின் சொத்து மதிப்பு ரூ. 3800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது நிகர மதிப்பின் பெரும் பங்கு டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் மூலமாக கிடைத்து வந்தது. அதில் இருந்து கணிசமான தொகை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது, இது ரத்தன் டாடாவின் தாராள குணத்தை எடுத்துக்காட்டுகிறது.