வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்கு!

60பார்த்தது
வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
இந்தியா - வங்கதேச ஆகிய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. 222 ரன்கள் வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி