எடப்பாடி - Edappadi

எடப்பாடி அருகே விவசாயி வீட்டை உடைத்து, 13 பவுன் நகை திருட்டு

எடப்பாடி அருகே விவசாயி வீட்டை உடைத்து, 13 பவுன் நகை திருட்டு

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணி பேரூர் கீழ் முகம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 52), விவசாயி. இவருடைய மனைவி சத்யா, இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சேட்டு கடந்த 17-ந் தேதி குடும்பத்தினருடன் அவரது உறவுக்காரர் இறப்பு நிகழ்ச்சிக்கு துக்கம் விசாரிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பிரதான கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சேட்டு எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், திருட்டு நடைபெற்ற வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்த போலீசார், மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து கிராமமான வெண்டனூர் பகுதியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை கண்காணிப்பாளர் வீட்டில் 17 பவுன் தங்க நகைகள் திருட்டு போன நிலையில், தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా