சேலம் மாவட்டத்தில் வலி நிவாரண மாத்திரைகள் அதிகம் வாங்கி அதை போதைக்காக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மருந்து விற்பனை கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மருந்துக் கட்டுபாட்டு அதிகாரியிடம் கேட்ட போது டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கிய சேலத்தில் உள்ள 6 மருந்துக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நாமக்கல்லில் ஒரு மருந்துக் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக் கூடாது. இது போன்ற ஆய்வு பணிகள் தொடரும். விதிகளை மீறும் மருந்து விற்பனை கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.