சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் வக்கீல் விஜயராஜா தலைமையில் அமைப்பு செயலாளர் அருண்குமார் நிர்வாகிகள் தாரை மணி, குமார், விஜயன், தர்மராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதில் அவர்கள் கூறியிருப்பது கொங்கணாபுரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி 5 கோடி மதிப்பீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கல்லூரி திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு கல்வியில் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான அரசு கல்வியியல் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மாணவ மாணவிகள் இளங்கலை கல்வியியல் படிக்க ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது எனவே கொங்கணாபுரத்தில் உள்ள அரசு கல்வி இயல் கல்லூரியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.