சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த முருகன் இவரது மகன் மாதையன் 34 கூலி வேலை செய்து வருகிறார் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் மாதையன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இன்று குமரகிரி ஏரி பகுதியில் மது அருந்தி உள்ளனர். பின்னர் குமரிகிரி ஏரியின் நடுவில் உள்ள கொடுக்காபுளி மரத்தில் காயை பறிப்பதற்காக சென்ற மாதையன் திரும்பி வரும் பொழுது நிலை தடுமாறி ஏரியில் விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் அம்மாபேட்டை போலீசுக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஏரியில் மாதையன் உடலை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த மாதையன் உறவினர்கள் ஏரியின் முன்பு திரண்டு உள்ளனர்.