புரோ கபடி: 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி

54பார்த்தது
புரோ கபடி: 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டி 11வது சீசன் ஹைதராபாத்தில் கடந்த அக்.18ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று (அக்.20) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் 44 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற 2வது ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில், 35 - 25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி