
எடப்பாடி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன், ஏட்டு மோகன் குமார், சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அமுதா மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மண் கொண்டு சென்ற லாரியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரியில் மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் சசிகுமாரை கைது செய்தனர். லாரி உரிமையாளர் சண்முகத்தை தேடி வருகின்றனர்.