அரசு மருத்துவமனை காப்பீட்டுத் திட்ட மேலாளா்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை, சாயல்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்பீட்டுத் திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கமுதி அரசு மருத்துவமனை காப்பீட்டு திட்ட மேலாளா் வசீகரன், சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலைய காப்பீட்டுத் திட்ட மேலாளா் தவமணி ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் சான்றிதழ், பரிசு வழங்கிப்பாராட்டினாா்.