சாயல்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி.!

65பார்த்தது
சாயல்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ் தரைக்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10. ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக பொங்கல் வைத்தல் , அபிஷேக ஆராதனைகள தினமும் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில்
ராமநாதபுரம் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் கலந்து கொண்ட நிலையில்
அதனை மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு வீரத்துடன் காளைகளை அடக்கினர்.

இப்போட்டியில்
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்க பரிசு தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இப்போோட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாயல்குடி கடலாடி கமுதி முதுகுளத்தூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு இப்போட்டியை கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி