லஞ்சம் வாங்கிய நபர்கள் கைது

73பார்த்தது
ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் என்பவர் தனது தந்தையின் பெயரில் ஆப்பனூர் பெரிய கண்மாயிலிருந்து வண்டல்/சவடு மண் எடுத்துச்செல்வதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதன் பேரில் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மண் அள்ள அனுமதி கேட்பதற்காக ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் என்பவரை சந்தித்து விபரம் கேட்க, அவரும் அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரின் வாகன ஓட்டுனர் சத்தியநாதன் ஆகிய இருவரும் மேற்படி கண்மாயில் இருந்து மண் எடுத்து செல்ல அனுமதி ஆணை வாங்கி தருவதற்கு தங்களுக்கும் தாசில்தாருக்கும் லஞ்சமாக 4 ஆயிரம் வேண்டுமென்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத இராமச்சந்திரன் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் ஏற்பாட்டின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ. 4 ஆயிரத்தை கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சத்தியநாதன் என்பவர் கேட்டுப்பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சத்தியநாதனை கைது செய்ய முயன்றது போது இரசாயணம் தடவிய லஞ்சப்பணத்துடன் தப்பி ஓடிவிட்டார்.
அவரது செல்போன் மூலம் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாலை 3 மணியளவில் பிடித்து உரிய விசாரணைக்கு பின்பு கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி