ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் தனியார் குழுமத்தின் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் செங்கப்படை ஊ. கரிசல்குளம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 600 விவசாயிகளுக்கு மகசூல் அதிகம் தரும் பருத்தி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செய்முறை விளக்கம் மற்றும் பயன்கள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. சோலார் தலைமை அதிகாரி வினோத், கமுதி விவசாயத் துறை அதிகாரி சிவராணி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை வழங்கினர்.