ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது பிள்ளையார்குளம் கிராமம் இக்கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் அரக்காசு என்ற முஸ்லீம் பெண் ஒருவர் இங்கு அடக்கமாகி உள்ளார். அந்த இடத்தில் தர்ஹா எழுப்பி இந்துக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வருகின்றனர்.
இத் திருவிழாவில் ஏராளமான இந்துக்கள் மற்றும் சாயல்குடி பகுதி முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, பூ போட்டு, சர்க்கரை பொரிகடலை படைத்து அரக்காசு அம்மனை வழிபட்டனர்.
வந்த அனைத்து மத பக்தர்கள் அனைவருக்கும் 2000 கிலோ அரிசி, 1000 கிலோ (89 ஆடு) ஆட்டு கறி சமைத்து பிள்ளையார் குளம் கிராமம் சார்பில் அசைவ சமபந்தி விருந்து மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழங்கப் பட்டது.