அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு.!

73பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வளநாடு அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 199-வது ஆய்வை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்களிடம் கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துகளையும், எண்களையும் வாசிக்கச் சொன்ன பின் மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாசித்ததால் ஆசிரியர் தேவிக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இப்பள்ளியில் பயிலும் 41 மாணவர்களும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயன் பெறுகின்றார்கள் எனும் தகவலையும் கேட்டறிந்து பள்ளிக்கு தேவையாக சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி