மீனங்குடி கிராமத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்
குடிநீருக்காக நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய அவல நிலை:
என்று தனியுமோ? தண்ணீர் தாகம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மீனங்குடி கிராமத்தில் பல நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தண்ணீர்க்காக ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலாடி அருகே உள்ள மீனங்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பல நாட்களாக காவிரி குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் குடிநீர் வரும் குழாய்களில் நாளும் முழுவதும் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு தண்ணீர் வந்தாலும் இரண்டு அல்லது மூன்று குடத்திற்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பகுதிக்கு கடலாடியிலிருந்து நரசிங்க கூட்டம் வழியாக மீனங்குடிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பல நாட்களாக இங்கு காவிரி கூட்டு குடிநீர் வராததால் குடிநீர் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது