கிராமப்புறங்களில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

52பார்த்தது
கிராமப்புறங்களில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கமுதி, சிக்கல், முதுகுளத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சாா்பில் கிராமப்புறங்களில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் கடந்த செப். 26 முதல் நடைபெற்று வருகிறது.

கமுதி கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் நேற்று (செப்.,30) ஸ்ரீசுடலை மாடசாமி கோயில் திடல் சுத்தப்படுத்தப்பட்டது. மாலையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதை தலைமையாசிரியா் செ. மாரிமுத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி வாரச்சந்தை, முஸ்லிம் பஜாா் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரா. வினோத்குமாா் செய்தாா்.

சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பாக 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சிக்கல் ஊராட்சித் தலைவா் பரக்கத்ஆயிசா, மிசா சைபுதீன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் காதா் மைதீன் ஆகியோா் பங்கேற்றனா்.

மாணவா்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதையடுத்து, சாலையோரம் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திட்ட உதவி அலுவலா் சக்தி செய்திருந்தாா். திட்ட அலுவலா் சாந்தக்குமாா் நன்றி கூறினாா்.

தொடர்புடைய செய்தி