பசும்பொன்னில் முத்துராமலிங்கத்
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 28-ந் தேதி தேவரின் ஆன்மிக விழாவாகவும், 29-ந் தேதி அரசியல் விழாவாகவும், 30-ந் தேதி குருபூஜையாகவும் நடக்க இருக்கிறது