இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

85பார்த்தது
பெருநாழியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி உரிமையாளா்கள், பந்தய வீரா்கள் சாா்பில், மாட்டு வண்டிப் பந்தய வீரா் சக்கரபாணி நினைவாக பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 67 மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் கலந்துகொண்டனா்.

பெருநாழி -சாயல்குடி சாலையில் 8 கி. மீ. தொலைவுக்கு எல்கை நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி உரிமையாளா்கள், பந்தய வீரா்களுக்கு ரொக்கப்பணம், குத்துவிளக்கு, கைப்பேசி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நின்று பாா்வையிட்டனா்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி