மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மிளகாய் பொடி தூவி சதீஷ்(37) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலக்கால் கணவாய் அருகே காரில் வந்த மர்ம நபர்கள் சதீஷின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டி உள்ளனர். படுகாயமடைந்த சதீஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.