ராணுவ வீரருக்கு மேளதளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

80பார்த்தது
இந்திய ராணுவத்தில் பணியாற்றி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு மேளதளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(36) இவர் தனது 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.


இந்த நிலையில் படைவீரராக பணியில் சேர்ந்த ரஞ்சித்குமார் பதவி உயர்வு பெற்று ஜம்மு காஷ்மீரில் ஹவில்தாராக பணியாற்றி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பணி முடிந்து
தற்போது ஓய்வு பெற்றதின் காரணமாக சொந்த ஊர் திரும்பியபோது ராணுவ உடையில் வந்த ரஞ்சித் குமாருக்கு போகலூர் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மேள தாளங்களுடன் திருவிழாபோல் ஊர்வலமாக அழைத்து வந்து இனிப்புகள் ஊட்டி கொண்டாடினர்.

நாட்டிற்காக சேவையாற்றி தற்போது ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் அளித்த வரவேற்பு சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி