முனியப்ப சுவாமி திருக்கோயில் பொங்கல் விழா

61பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திணைக்குளம் கிராமம் அமைந்துள்ளது. திணை அதிகமாக விளைந்ததாலேயே திணை குளம் என இந்த ஊருக்கு பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முனியப்ப சுவாமி பொங்கல் விழா நாகசுந்தரி அம்மன் களியாட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நேற்று (செப்.,24) முன்னதாக சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து வானவேடிக்கையுடன் ஆட்டம் பாட்டத்துடன் மேள தாளங்கள் முழங்க பால்குடம், அக்கினி சட்டி, பூங்கரகம், பூ மரக்கால், மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனிடம் சமர்ப்பித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பின்னர் தர்ம முனிஸ்வரருக்கு பொங்கல் வைத்து நெய்வேத்தியம் சமர்ப்பிக்கபட்டது தொடர்ந்து அம்மனுக்கு பல நறுமணத் திரவியங்கள அபிஷேகம் நடைபெற்று மங்கள தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு கரகத்தில் எட்டு நாட்கள் ஊற வைக்கப்பட்ட பழரசம் அருந்துவதால் நோய் நீங்குவதாக கூறப்படும் நிலையில் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து மலர் மாலைகளால் விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த நாகசுந்தரி அம்மனை பக்தர்கள் பலரும் மனம் உருகி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திணை குளம் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி