

ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்
ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19. 700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.