சாயல்குடி அருகே உள்ள பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க கந்தூரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு 1500 கிலோ ஆட்டுக்கறி, 500 கிலோ நாட்டு கோழிக்கறி என விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் சுமார் 310 ஆண்டு பழமையான அரக்காசு அம்மா தர்ஹா உள்ளது. இங்கு இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இணைந்து ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் சந்தனகாப்பு கந்தூரி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.