ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நரசிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாதாள காளியம்மன் வருடாந்திர புரட்டாசி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பக்தர்கள் வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் 108 பால்குடங்களை நரசிங்கம்பட்டி கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக கிராம நகர்வலமாக பாதாள காளியம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது.
இதில் நரசிங்கம்பட்டி கோட்டைமேடு கமுதி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.