கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி 2022-ல் அரசு ஐடிஐ துவக்கப்பட்டது. தனி கட்டடம் வசதியின்றி கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதி கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு பிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக் மோட்டார் வாகனம் மற்றும் ஏ. சி. , ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக் உள்ளிட்ட 4 பிரிவுகள் செயல்படுகிறது. ஆண்டிற்கு 88 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுகிறது.
நடப்பாண்டில் முதல் செட் முடித்தவர்கள் வளாகத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வெளியிடங்களில் பணிக்கு சென்றுள்ளனர். கடலாடி பொதுமக்கள் மற்றும் நகர் வர்த்தகர் சங்கம், தன்னார்வலர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.7 கோடியில் கடலாடி - எம்.கரிசல்குளம் ரோட்டில் மூன்றரை ஏக்கரில் அரசு ஐடிஐ கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. அடுத்த கல்வியாண்டிற்குள் பணிகள் நிறைவு பெற்று விடும். ரூ. 7 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் அரசு ஐடிஐ கட்டடம் தரமாக கட்டப்படுகிறதா என கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்