தேவர் குருபூஜை; பசும்பொன்னில் ஆட்சியர் ஆய்வு

65பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி117-வது ஜெயந்தி விழா, 62-வது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது

ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா ஏற்பாடுகள் குறித்தும், அக்டோபார் 30ஆம் தேதி அரசு விழா நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த வருவதால் அதன் ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித்சிங் தலைமையில் இன்று (செப்.,26) வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் பசும்பொன்னில் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அரசியல் தலைவர்கள் வரும் பாதைகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித்சிங்,
குருபூஜையை ஒட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்ய பட்டு வருகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்தி