ரூ.50,000 கொடுக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள், தேசிய போட்டிகளில் பங்கேற்றால் ரூ.25,000, சர்வதேச போட்டிகளுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குகிறது. பங்கேற்கும் ஆண்டில் மட்டும் ஒரு முறை அந்த நிதி வழங்கப்படும். இதற்கு, அரசு அங்கீகரித்த 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.